டிவிஎஸ் ரைடர் புதிய பதிப்பு வெளியீடு!Boost Mode + Dual Disc Brakes – நகர சவாரிக்கு டிவிஎஸ் ரைடர் 125 வந்தாச்சு.. விலை எவ்வளவு?
TVS Rider new version launched! Boost Mode Dual Disc Brakes TVS Rider 125 has arrived for city riding What is the price
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான 125cc ரைடர் மோட்டார்சைக்கிளின் புதிய பதிப்பை “The Wicked Troika” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.புதிய வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இது தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய ரைடர் மாடல், இளம் ரைடர்களின் விருப்பம் மற்றும் நவீன சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மெட்டாலிக் சில்வர் பிண்ணியம் மற்றும் சிவப்பு அலாய் வீல்களுடன், பைக் ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்குகிறது.
புதிய Raider மாடலில் 125cc திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் iGO Assist தொழில்நுட்பம் மூலம் பூஸ்ட் முறை (Boost Mode) செயல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் 11.38 bhp பவர் மற்றும் 11.75 Nm டார்க் 6,000 rpm-ல் கிடைக்கிறது.
நகரப் பயணத்தின் போது வேகமான ரெஸ்பான்ஸ் மற்றும் மென்மையான ஓட்ட அனுபவத்தை இது வழங்குகிறது.
மேலும், புதிய Glide Through Technology (GTT) அம்சம் நகர நெரிசலில் பைக்கை எளிதாக இயக்க உதவுகிறது.முன்புறம் 90/90-17 மற்றும் பின்புறம் 110/80-17 அளவிலான பரப்பான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதனால் சிறந்த கிரிப் மற்றும் ஸ்டேபிலிட்டி கிடைக்கிறது.
பாதுகாப்பு அம்சங்களில் டிவிஎஸ் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.இந்த மாடலில் டூயல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ABS (Anti-lock Braking System) வசதி வழங்கப்பட்டுள்ளது.இது 125cc பிரிவில் முதல் முறையாக இணைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சமாகும்.இதனால் ரைடர் திடீர் பிரேக்கிங் செய்யும் போது கூட முழுமையான கட்டுப்பாட்டை பெற்றிருப்பார்.
புதிய ரைடரில் SmartXonnect தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.இதில் இரண்டு வகை டிஸ்ப்ளே விருப்பங்கள் உள்ளன – TFT ஸ்கிரீன் மற்றும் LCD கிளஸ்டர்.TFT ஸ்கிரீனில் 99க்கும் மேற்பட்ட அம்சங்கள், LCD கிளஸ்டரில் 85க்கும் மேற்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.புளூடூத், வாய் அசிஸ்ட், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், கால் ஹேண்ட்லிங், நோட்டிபிகேஷன் வசதிகள் மூலம் பயண அனுபவம் மேலும் நவீனமடைந்துள்ளது.
மேலும், Follow Me Headlamp வசதி இருட்டான இடங்களில் பயணிக்கும் போது விளக்கை சில விநாடிகள் ஆன் நிலையில் வைத்திருக்கும், இது பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
விலை விவரத்தில், TFT Dual Disc Variant ரூ.95,600 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையிலும்,SXC Dual Disc Variant ரூ.93,800 விலையிலும் கிடைக்கிறது.
இவை தற்போது அனைத்து டிவிஎஸ் மோட்டார் டீலர் ஷோரூம்களிலும் விற்பனைக்கு வந்துள்ளன.புதிய வடிவமைப்பு, உயர் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன்,டிவிஎஸ் ரைடர் “The Wicked Troika” மாடல் 125cc பிரிவில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
English Summary
TVS Rider new version launched! Boost Mode Dual Disc Brakes TVS Rider 125 has arrived for city riding What is the price