டிவிஎஸ் மோட்டார் 2025 நவம்பரில் சாதனை விற்பனை — 30% ஆண்டு வளர்ச்சி! 4.97 லட்சம் யூனிட்கள் ரெக்கார்ட்!
TVS Motor records record sales in November 2025 30 YoY growth Record 4 lakh units
2025 நவம்பரில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை வரலாற்றிலேயே மிக வலுவான வளர்ச்சியைப் பெற்றது. மொத்தம் 5,19,508 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான 4,01,250 யூனிட்களுடன் ஒப்பிடும் போது 30% ஆண்டு வளர்ச்சி எனும் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளது. இருசக்கர வாகனங்களின் தேவை அதிகரித்ததும், எலக்ட்ரிக் வாகன விற்பனை பலியாக உயர்ந்ததும் இந்த சாதனைக்கு காரணமாக உள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை இந்த மாதத்தில் 4,97,841 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 3,92,473 யூனிட்களை விட 27% அதிகமாகும். இந்திய சந்தையில் மட்டும் 20% வளர்ச்சியுடன் 3,65,608 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
2024 நவம்பரில் 1,80,247 யூனிட்கள் விற்பனையாகிய மோட்டார் சைக்கிள்கள், 2025 நவம்பரில் 2,42,222 யூனிட்கள் விற்பனையாகி 34% அதிகரித்தன. இந்த உயர்வு டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய பலம்.
ஸ்கூட்டர் விற்பனையும் 27% உயர்வு
நகர்ப்பயணங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்கூட்டர்களின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் டிவிஎஸ், 2025 நவம்பரில் 2,10,222 யூனிட்களை விற்று 27% வளர்ச்சியைப் பதிவு செய்தது.
புதிய காலத்தின் தேவையாக மாறியுள்ள எலக்ட்ரிக் வாகனங்களில் டிவிஎஸ் நிறுவனம் மேலும் வலுவடைந்துள்ளது. EV விற்பனை கடந்த ஆண்டு நவம்பரை விட 46% அதிகரித்து 38,307 யூனிட்களை எட்டியுள்ளது. இது டிவிஎஸின் எலக்ட்ரிக் வாகன துறையில் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
வெளிநாட்டு சந்தைகளிலும் டிவிஎஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மொத்தம் 1,48,315 யூனிட்கள் வெளிநாடுகளில் விற்கப்பட்டன.இதில் இருசக்கர வாகனங்கள் 1,32,233 யூனிட்கள்.மூன்று சக்கர வாகனங்களில் 147% வளர்ச்சி ஏற்பட்டு, 8,777 யூனிட்டுகளிலிருந்து 21,667 யூனிட்களாக விற்பனை உயர்ந்தது.
டிவிஎஸ் மோட்டார், விற்பனை வளர்ச்சியில் மட்டுமல்ல, தரத்திலும் முன்னணியில் இருக்கிறது. இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் நான்கு உயர்தர தொழிற்சாலைகள், உலகின் 80 நாடுகளுக்கு ஏற்றுமதி, மேலும் டெமிங் விருது பெற்ற ஒரே இருசக்கர நிறுவனம் என்பதும் அதன் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது. J.D Power ஆய்வுகளில் தொடர்ந்து முதலிடம் பெறுவதும் இதற்கு ஆதாரமாகும்.
2025 நவம்பரில் கிடைத்த இந்த சாதனை, டிவிஎஸ் நிறுவனத்தின் வணிக வளர்ச்சிக்கும், இந்திய இருசக்கர மற்றும் எலக்ட்ரிக் வாகன சந்தைக்கும் பெரும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
English Summary
TVS Motor records record sales in November 2025 30 YoY growth Record 4 lakh units