தொடர்ந்து மளமளவென சரியும் தங்க விலை.! இன்றைய விலை நிலவரம்., இல்லத்தரசிகள் குஷி.!  - Seithipunal
Seithipunal


தீபாவளிக்கு பின்பு சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து 38,772 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதுமே பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யும் வகையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். எனவே, தங்கத்தின் தேவையும், விலையும் உயர்ந்து வருகிறது. 

இதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறியும், இறங்கியும் வருகிறது. தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இந்த தொடர் விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1248 குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தீபாவளிக்குப் பின்னர் நகை விலை படிப்படியாக குறையத் துவங்கியது. 

இந்த நிலையில் இன்றைய (நவ.19) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.264 குறைந்து, ரூ.37,9760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல சென்னையில் வெள்ளியின் விலை கிராமத்து ரூ.66.70க்கு விற்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold Rate Nov 19


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->