டாடா காருன்னா சும்மாவா.. ஒரே மாசத்துல 3,770 யூனிட்ஸ் விற்பனை.. மார்க்கெட்டில் அதிரடி காட்டும் டாடா ஆல்ட்ரோஸ்!
Tata Caruna is not idle 3770 units sold in a single month Tata Altroz is making waves in the market
இந்திய பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் கடுமையான போட்டியிலும், டாடா ஆல்ட்ரோஸ் தனது விற்பனை திறனை மீண்டும் நிரூபித்துள்ளது. அக்டோபர் 2025-இல் மட்டும் 3,770 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, கடந்த ஆண்டை விட 43% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது ஆல்ட்ரோஸின் தொடர்ச்சியான சந்தை நிலைப்பாட்டையும், வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2024-இல் இந்த மாதிரியின் விற்பனை 2,642 யூனிட்கள் மட்டுமே. இந்த வரிசையில், ஒரு ஆண்டில் 1,128 யூனிட்கள் கூடுதல் விற்பனை என்பது டாடா நிறுவனத்துக்கு பெரும் சாதனையாகும்.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள் பல. 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு, பிரீமியம் அம்சங்கள், வலுவான கட்டமைப்பு, மற்றும் போட்டி விலையில் கிடைப்பது ஆகியவை வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. ரூ.6.30 லட்சம் தொடக்கம் ரூ.10.51 லட்சம் வரை விலை வரம்பில் கிடைக்கும் ஆல்ட்ரோஸ், விலை–அம்சங்கள் சமநிலையில் முன்னிலை வகிக்கிறது. ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் அதிகபட்சம் ரூ.1.12 லட்சம் வரை கிடைத்த தள்ளுபடிகள் கூட விற்பனையை மேலும் அதிகரித்துள்ளன.
எஞ்சின் ஆப்ஷன்களிலும் ஆல்ட்ரோஸ் பலத்த போட்டியாளராக உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 88 PS பவர் அளிக்க, அதே எஞ்சின் பை-பியூல் (CNG) வடிவம் 73.5 PS பவர் வழங்குகிறது. டீசல் விரும்புவோருக்கான 1.5 லிட்டர் எஞ்சின் 90 PS பவர் மற்றும் 200 Nm டார்க் வழங்குகிறது. 19 முதல் 26 kmpl வரை மைலேஜ் தரும் இந்த மாடல், பயனாளர்களுக்கு செலவு குறைவு, செயல்திறன் அதிகம் என்ற உறுதியையும் தருகிறது.
பாலேனோ, ஹூண்டாய் i20 போன்ற மாடல்களுடன் நேரடி போட்டியில் இருந்தாலும், ஆல்ட்ரோஸ் தொடர்ந்து வளர்ச்சி கண்டது டாடா நிறுவனத்தின் தரத்தையே உறுதி செய்கிறது. பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில், ஆல்ட்ரோஸ் முன்னணி போட்டியாளராக தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது.
English Summary
Tata Caruna is not idle 3770 units sold in a single month Tata Altroz is making waves in the market