தங்கம் விலையில் திடீர் அதிர்ச்சி...! அதிரடியாக உயர்ந்த விலையால் மக்கள் பீதி...! இன்றைய விலை நிலவரம் என்ன...?
sudden shock gold prices People panic drastic price increase What today prices
2025-ம் ஆண்டு தங்க சந்தையில் இதுவரை காணாத அதிர்வுகளை பதிவு செய்த ஆண்டாக மாறியது. ஆண்டுக்குள் சுமார் 52 முறைக்கும் மேலாக புதிய உச்சங்களை தொட்ட தங்கம், யாரும் கணிக்காத வகையில் சவரனுக்கு ரூ.1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்து சென்றது.
இந்த திடீர் விலை பாய்ச்சல், முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியதோடு, நகை வாங்க நினைத்த நடுத்தர குடும்பங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அதன் பின்னர் தங்க விலை ஏற்றத் தாழ்வுகளுடன் நகர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.1,03,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு கிராம் ரூ.100 அதிகரித்து ரூ.12,900-க்கு விற்கப்பட்டது. நேற்று விடுமுறை தினமாக இருந்ததால், விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய தங்கம் விலை – வரலாறு காணாத சாதனை
இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக பாய்ந்து, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.1,04,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,120 என்ற அளவிற்கு சென்றுள்ளது. இந்த விலை உயர்வு தங்க சந்தையை மீண்டும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளி விலையும் பறக்கிறது
தங்கத்தின் பாதையில் வெள்ளியும் வேகமாக முன்னேறி வருகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 உயர்ந்து ரூ.2,87,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.287-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 7 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
12.01.2026 – சவரன் ரூ.1,04,960 | கிராம் ரூ.13,120 (இன்று)
11.01.2026 – சவரன் ரூ.1,03,200 (நேற்று)
10.01.2026 – சவரன் ரூ.1,03,200
09.01.2026 – சவரன் ரூ.1,02,400
08.01.2026 – சவரன் ரூ.1,02,000
07.01.2026 – சவரன் ரூ.1,02,400
06.01.2026 – சவரன் ரூ.1,02,640
English Summary
sudden shock gold prices People panic drastic price increase What today prices