இலங்கை: வருமானம் 4,990 பில்லியன், செலவு 7,190 பில்லியன்! இலங்கையின் வரவுசெலவு திட்டங்களின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்...! - Seithipunal
Seithipunal


இலங்கை அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்கள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த வரவு செலவு திட்டத்தின் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரக் குமார திஸநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான வருமானம் 4,990 பில்லியன் ரூபாய் மதிப்பீடும், செலவு 7,190 பில்லியன் ரூபாயும் மதிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறையாக 220 பில்லியன் ரூபாய் காணப்படுகிறது.

வரவு செலவு திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

1. அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திரச் சம்பளத்தை 25,240 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய் அதிகரிக்க யோசனை முன் வைக்கிறது. இதன்படி அரசு ஊழியர்களின் குறைந்தபட்சச் சம்பளம் 15,750 ரூபாய் வரை அதிகரிக்கப்படுகிறது.

2. தனியார்த் துறை ஊழியர்களுக்கு மாதாந்திர அடிப்படைச் சம்பளத்தை 21,000 ரூபாயிலிருந்து, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27,000 ரூபாய் வரையும், 2026 ஆம் ஆண்டில் 30,000 ரூபா வரை அதிகரிக்க யோசனை முன் வைக்கிறது.

3. தோட்ட தொழிலாளர் ஒருவரின் நாளாந்த அடிப்படையில் சம்பளத்தை 1700 ரூபாயாக வழங்குவதற்கு அரசாங்கம் தலையீடு செய்யும் என அவர்க் கூறியுள்ளார்.

4. மலையக தமிழ் இளைஞர்களுக்காகத் தொழில் பயிற்சி, வாழ்க்கைத் தரம் உயர்வு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 4,267 மில்லியன் ரூபாய் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்கள். மலையகத் தமிழ் சமூகத்தின் பாடசாலைகளுக்காக வகுப்பறைகளை அமைத்து 866 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

5. ஓய்வூதியத்தை அதிகரிக்க 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அல்லது அதற்குப் பின்னால் ஓய்வு பெறுபவர்களின் ஓய்வூதியம் புதிய திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் கடன் எல்லை 250,000 முதல் 400,000 வரை அதிகரிக்கப்படுகிறது.

6. விவசாயிகளைப் பாதுகாக்கும் திட்டம், அரசாங்கத்தின் நெல் கொள்ளளவு செய்வதற்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வதோடு, விவசாயிகளின் உர மானியத்தை அளிப்பதற்காக 35000 மில்லியன் ரூபாய் வரை ஒதுக்கீடு செய்துள்ளது.

7. ரயில் போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ரயில் பெட்டிகளை நியமனம் செய்ய 250 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. முல்லைதீவில் இருந்து புது குடியிருப்பு நோக்கி செல்லும் வீதியில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாண பணிகளுக்காக1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

9. கிழக்கு மாகாண பொருளாதார அபிவிருத்திக்காகவும், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலாதுறைச் சேவை முன்னேற்றம் அடைய அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டம் ஊடக யோசனை முன்வைத்துள்ளது.

10. இலங்கைத் தினம், இந்தத் தினத்தை நடத்துவதற்காக வரவு செலவு திட்டத்தின் ஊடக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lankas budget plans for this year 10 key highlights


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->