தங்கத்தின் பறக்கும் விலை தரையில் இறங்கியது...! வெள்ளியும் வீழ்ச்சி பாதையில்! - இன்றைய விலை நிலவரம் தெரியுமா...? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்தது போல, இப்போது அதே வேகத்தில் கீழே சரிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த மாதம் 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.87,600 என்று இருந்தது. அதன் பின்னர் தினம் தினம் உயர்ந்து 6-ந்தேதி ரூ.89,000, 11-ந்தேதி ரூ.92,000, 16-ந்தேதி ரூ.95,000 என்ற அளவுக்கு சென்றது.

அதற்குப் பிறகு 17-ந்தேதி வரலாறு காணாத உச்சமாக ரூ.97,600-ஐ தொட்டது.ஆனால், எப்போதும் போல “உயர்ந்தது கீழே வர வேண்டும்” என்ற விதியை மீறாமல் தங்கம் விலை நேற்று அதிரடியாக சரிந்தது. காலை நேரத்தில் கிராமுக்கு ரூ.300, பவுனுக்கு ரூ.2,400 வீழ்ச்சி கண்டது. பிற்பகலில் மீண்டும் கிராமுக்கு ரூ.160, பவுனுக்கு ரூ.1,280 குறைந்தது.

இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தங்கம் விலை குறைந்து, பவுனுக்கு ரூ.320 வீழ்ச்சியுடன் ரூ.92,000 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,500 என நிலைபெற்றுள்ளது. தங்கத்தின் மீது முதலீடு குறைந்ததன் விளைவாக விலை சரிவு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தங்கம் விலை போல், வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ.1 மற்றும் கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, தற்போது ஒரு கிராம் ரூ.174, ஒரு கிலோ ரூ.1,74,000 என விற்பனை செய்யப்படுகிறது.இந்த தங்கம் விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் திளைக்க, திருமண வீடுகளில் “பணம்வாங்கு, நகை வாங்கு” என சந்தையில் மீண்டும் உயிர்த்துடிப்பு காணப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

soaring price gold has come down to earth Silver also decline Do you know current price situation


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->