நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி...! தங்கம் விலை மீண்டும் ஏற்றத்தில்...!இன்றைய நிலைவரம் என்ன...?
Shock jewelry lovers Gold prices rise again What current situation
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காமல் ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த 12-ம் தேதி முதல் தங்கம் விலை திடீர் உயர்வுகளும் சரிவுகளும் என ரோலர் கோஸ்டர் போல் நகர்ந்து வருகிறது.கடந்த 11-ம் தேதி ஒரு சவரன் ரூ.96,400 ஆக இருந்த தங்கம், 12-ம் தேதி ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்து ரூ.98,960-ஐ எட்டியது.

15-ம் தேதி ரூ.1,00,120 ஆக இமாலய உச்சத்தை தொட்ட தங்கம், அடுத்த நாள் சிறிது சரிந்து ரூ.98,800 ஆக விற்பனையானது.நேற்று மீண்டும் வேகம் பிடித்த தங்கம், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200 ஆக விற்றது.
இன்று மேலும் ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்துக்கு சவால் விடும் வகையில் வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது.
நேற்று ஒரு கிராம் ரூ.222-ஆக இருந்த வெள்ளி, இன்று ரூ.224 ஆக உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2.24 லட்சத்தை எட்டியுள்ளது.
மேலும், வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலைகள் ஏற்ற–இறக்கத்துடன் தொடரும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Shock jewelry lovers Gold prices rise again What current situation