பெண்களுக்கு புத்துணர்வு செய்தி! சற்று குறைந்த தங்கம் விலை! - Seithipunal
Seithipunal


தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வருகிறது. இதில் கடந்த 11-ந்தேதியிலிருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு பவுன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

அதன் மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதையடுத்து கடந்த 16, 17-ந் தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்றும் நேற்று முந்தினமும் மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது.

இதில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9250-க்கும், ஒரு பவுன் ரூ.74000 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74,120 ஆக விற்பனையான்து.

ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. பவுனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு பவுன் ரூ.73,680 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,210 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Refreshing news for women Slightly lower gold prices


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->