இன்று மட்டும் சற்று ஆறுதல் தந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைப்பில் இருந்து வருகின்றனர். மேலும், உயரும் போது வேகமாக ரூபாய் கணக்கில் உயரும் விலை, குறையும் போது பைசா கணக்கில் குறைந்து வருகிறது.

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. பின்னர் மீண்டும் சரிவை சந்திக்க துவங்கியது. இந்த நிலையில்லாத விலையேற்றம் இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. 

இதனால் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த பெட்ரோல், டீசல் விலை, தற்போது மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது. 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டர் ரூ. 74.81 ஆகவும், நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டர் ரூ. 68.32 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த சில வாரங்களாக உயர்வை சந்திக்காமல் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. மேலும், விலை இன்னும் சற்று குறைந்து நீண்ட நாட்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

petrol and diesel price on feb 24


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->