மஹிந்திரா புதிய தார் 5-டோர் வெர்ஷன்.! - Seithipunal
Seithipunal


மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய தார் 5-டோர் வெர்ஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய‌ உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மஹிந்திரா தார் 5-டோர் மாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி
உள்ளது. 

புதிய மஹிந்திரா தார் 5 டோர் மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ N பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் போர்ஸ் குர்கா 5-டோர் எஸ்யுவி மற்றும் மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் எஸ்யுவி உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

தற்போதைய தார் 3-டோர் மாடல் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mahindra New Thar 5Door Version


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->