குறைந்த செலவில் அதிக மைலேஜ்! 15 லட்சத்துக்குள்ள சூப்பரான 5 எலக்ட்ரிக் கார்கள்! எது பெஸ்ட்?
High mileage at low cost 5 great electric cars under 15 lakhs Which is the best
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தினசரி அலுவலக பயணங்களுக்கு மக்கள் மின்சார கார்கள் பக்கம் அதிகமாக திரும்பி வருகின்றனர். குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் நகரப் பகுதிகளில் குறைந்த செலவில் பயணிக்க முடியும் என்ற காரணத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை வேகமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சார்ஜிங் வசதிகளும் அதிகரித்து வரும் நிலையில், நீண்ட ரேஞ்ச், வேகமான சார்ஜிங் மற்றும் நவீன வசதிகளுடன் பல எலெக்ட்ரிக் கார்கள் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த 5 மாடல்கள் குறித்து பார்க்கலாம்.
எம்ஜி வின்ட்சர் EV
சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள எம்ஜி வின்ட்சர் EV-யின் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.18.49 லட்சம் வரை உள்ளது. இருப்பினும் ‘Battery As A Service’ திட்டத்தில் ரூ.9.99 லட்சத்தில் இருந்து வாங்க முடியும்.
இந்த காரில் 136 hp பவரை வழங்கும் Permanent Magnet Synchronous Motor பயன்படுத்தப்பட்டுள்ளது. 38 kWh மற்றும் 52.9 kWh என இரண்டு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் Pro வேரியன்ட் ஒரே சார்ஜில் சுமார் 449 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
மஹிந்திரா XUV 3XO EV
மஹிந்திராவின் இந்த காம்பாக்ட் எஸ்யூவி EV மாடலின் விலை ரூ.13.89 லட்சம் முதல் ரூ.14.96 லட்சம் வரை உள்ளது.
நகர சாலைகளில் எளிதாக ஓட்டவும் பார்க்கிங் செய்யவும் ஏற்ற இந்த காரில் 350 கி.மீ வரை பயணிக்கக்கூடிய ரேஞ்ச் வழங்கப்படுகிறது. 10.25 அங்குல டூயல் டிஸ்ப்ளே, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ADAS வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
டாடா நெக்ஸான் EV
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் SUV-களில் டாடா நெக்ஸான் EV முக்கியமானது. இதன் விலை ரூ.12.49 லட்சம் முதல் ரூ.17.29 லட்சம் வரை உள்ளது.
30 kWh மற்றும் 45 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த கார், அதிகபட்சமாக 489 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. 60 kW ஃபாஸ்ட் சார்ஜிங், காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
சிட்ரோயன் eC3
சிட்ரோயன் eC3 மாடலின் விலை ரூ.12.90 லட்சம் முதல் ரூ.13.53 லட்சம் வரை உள்ளது.
29.2 kWh பேட்டரி கொண்ட இந்த கார், ஒரே சார்ஜில் சுமார் 320 கி.மீ வரை பயணிக்கக்கூடியது. நகரப் பயன்பாட்டிற்கு எளிமையான மற்றும் வசதியான EV காராக இது பார்க்கப்படுகிறது.
டாடா பஞ்ச் EV
முதல் முறையாக எலெக்ட்ரிக் கார் வாங்க விரும்புபவர்களுக்கு டாடா பஞ்ச் EV ஒரு சிறந்த பட்ஜெட் தேர்வாக உள்ளது.
இதன் விலை ரூ.9.69 லட்சம் முதல் ரூ.12.59 லட்சம் வரை உள்ளது. ‘Battery As A Service’ திட்டத்தில் ரூ.6.49 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது.
30 kWh மற்றும் 40 kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் வரும் இந்த கார், அதிகபட்சமாக 468 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. 360 டிகிரி கேமரா மற்றும் 10.25 அங்குல டச் ஸ்கிரீன் போன்ற நவீன அம்சங்களும் இதில் உள்ளன.
குறைந்த செலவில் தினசரி பயணங்களை மேற்கொள்ள விரும்பும் அலுவலக ஊழியர்கள் மற்றும் குடும்ப பயன்பாட்டிற்காக EV கார் வாங்க நினைப்போருக்கு இந்த மாடல்கள் சிறந்த தேர்வுகளாக உள்ளன.
English Summary
High mileage at low cost 5 great electric cars under 15 lakhs Which is the best