நேற்றும் உயர்வு, இன்று இன்னும் ஜம்ப் அடித்த தங்கம் விலை...! பெண்கள் கவலையில்..! இன்றைய விலை நிலவரம் என்ன...?
Gold prices rose yesterday jumped even more today Women worried What price situation today
ஒரு நாள் கீழே… மறுநாள் மேலே… என்ற ‘ரொலர்கோஸ்டர்’ நிலையே கடந்த வாரம் முழுவதும் தங்க சந்தையில் தொடர்கிறது. நவம்பர் 21-ஆம் தேதி தங்கம் விலை சரிந்த நிலையில், 22-ஆம் தேதி திடீர் உயர்வு; பின்னர் மீண்டும் குறைவு, அதற்கு அடுத்த நாளே மீண்டும் ஏறியது. முதலீட்டாளர்கள் குழப்பத்தில், திருமண வீடுகள் திகைப்பில்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ₹11,520-க்கும், ஒரு சவரன் ₹92,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விலை திடீர் பாய்ச்சலில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்து, ஒரு கிராம் ₹11,720, ஒரு சவரன் ₹93,760 என மீண்டும் ₹93,000 தடையை தாண்டியது.ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் தங்கம் விலை அதிரடியாக ஏறிவிட்டது.
கிராம்: +₹80 → ₹11,800
சவரன்: +₹640 → ₹94,400
வெள்ளியும் பின் தங்கும் என உயர்வு!
வெள்ளி விலையும் இன்று புதிய ஸ்டெப்பில்.
கிராம்: +₹2 → ₹176
கிலோ பார் வெள்ளி: +₹2,000 → ₹1,76,000
கடந்த 5 நாள் தங்க விலை (22 காரட்)
தேதி ஒரு பவுன் விலை
25-11-2025 ₹93,760
24-11-2025 ₹92,160
23-11-2025 ₹93,040
22-11-2025 ₹93,040
21-11-2025 ₹91,680
கடந்த 5 நாள் வெள்ளி விலை
தேதி 1 கிராம் விலை
25-11-2025 ₹174
24-11-2025 ₹171
23-11-2025 ₹172
22-11-2025 ₹172
21-11-2025 ₹169
English Summary
Gold prices rose yesterday jumped even more today Women worried What price situation today