உயருது.. உயருது தங்கம் விலை.. பதறுது பதறுது பெண்கள் நிலை.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.‌

அதன்படி, தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,304-க்கு விற்பனை செய்யப்பட்டு, கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4538-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து ரூ.65,100-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Price increased


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->