சர்வதேச சந்தையில் தங்கம் புது உச்சம்...! நிபுணர்கள் 'இன்னும் உயரும்' என எச்சரிக்கை! இன்றைய விலை நிலவரம்...?
Gold hits new high international market Experts warn it will rise further Todays price situation
தங்கம் விலை இன்றும் ரோலர் கோஸ்டர் பயணத்தைத் தொடர்கிறது. ஒரு நாள் செம்ம உயரம், அடுத்த நாள் திடீர் சரிவு என்பதாக தொடர்ந்து ஊசலாடும் நிலை முதலீட்டாளர்களை குழப்புகிறது. ஒருபுறம் தங்கம் பாதுகாப்பான முதலீடு என்ற நம்பிக்கை, மறுபுறம் பங்கு சந்தையின் அதிரடி லாப ஆசை, இந்த இரண்டும் மாறி மாறி மக்களின் கவனத்தை இழுத்ததால் விலை மாற்றம் இன்னும் சமநிலை அடையவில்லை.
கடந்த அக்டோபர் 17-ம் தேதியன்று ஒரு சவரன் ₹97,600 என்ற ஸ்கிரீன் ஷாட்டே எடுத்திருக்கும் உயரத்தை தொட்டது. ஆனால் 11 நாட்களுக்குப் பிறகு அதே தங்கம் ₹88,600 எனப் பெரும் வீழ்ச்சியிலும் வந்தது. பின்னரும் உயர்வு–சரிவு என அலைபாய்ந்த நிலையில், இந்த மாதம் 13-ம் தேதி மீண்டும் விலை மேலே பாய்ந்து சவரன் ₹95,000-ஐ தாண்டியது.

அதன் பிறகு மீண்டும் தங்கம் தளர்ச்சி.நேற்றைய கணக்குப்படி, தங்கம் கிராமுக்கு ₹30 குறைந்து ₹11,770-க்கும், சவரன் ₹240 குறைந்து ₹94,160-க்கும் விற்பனையாகியது. ஆனால் வெள்ளி அதற்கு மாறாக பாய்ந்தது, கிராமுக்கு ₹4, கிலோவுக்கு ₹4,000 உயர்ந்து கிராம் ₹180, கிலோ ₹1,80,000 என்ற விலையில் சென்றது.
இன்று சந்தை மீண்டும் திரும்பியுள்ளது. தங்கம் விலை இன்றைய காலை கணக்கில் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,840,சவரன் ₹560 உயர்ந்து ₹94,720 என விற்பனையில் பதிவாகியுள்ளது.வெள்ளி தொடர்ந்தும் சிறு உயர்வில், கிராமுக்கு ₹3 அதிகரித்து ₹183, கிலோ விலை அதே ₹1,80,000-க்கு அருகே நிலைபெற்றுள்ளது.
English Summary
Gold hits new high international market Experts warn it will rise further Todays price situation