தங்கம், வெள்ளி இரண்டிலும் சரிவு: தங்கம் வாங்க ஏற்ற நேரமா...? இன்றைய விலை நிலவரம் என்ன...?
Gold and silver prices falling this right time buy gold What today prices
கடந்த மாதம் டிசம்பர் 15-ஆம் தேதி, தங்கம் விலை வரலாற்றுச் சாதனையாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டி உயர்ந்தது. அதன் பின்னர் சிறிது சரிவை சந்தித்த தங்கம், டிசம்பர் 22-ஆம் தேதி முதல் மீண்டும் ஏற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. டிசம்பர் 28-ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டிய தங்கம், அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பான சரிவை கண்டது.

இவ்வாறு ஏற்றத் தாழ்வுகளுக்கிடையே பயணித்த தங்கம் விலை, கடந்த ஒரு வாரமாக மீண்டும் உயர்வு போக்கிலேயே இருந்து வந்தது.நேற்றும் தங்கம் விலை உயர்ந்தே காணப்பட்டது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,290 என்ற விலையில் விற்பனையானது.தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் நேற்றைய தினம் உச்சத்தை எட்டியது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து ரூ.3,10,000-க்கும், கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் விலை
இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் சற்றே சரிவு காணப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனையாகி வருகிறது.
இன்று வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 குறைந்து ரூ.3,06,000-க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.306-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம்
16.01.2026 – ஒரு சவரன் ₹1,05,840
15.01.2026 – ஒரு சவரன் ₹1,06,320
14.01.2026 – ஒரு சவரன் ₹1,06,240
13.01.2026 – ஒரு சவரன் ₹1,05,360
12.01.2026 – ஒரு சவரன் ₹1,04,960
11.01.2026 – ஒரு சவரன் ₹1,03,200
ஏற்றத் தாழ்வுகளுடன் நகரும் தங்கம்–வெள்ளி சந்தை, முதலீட்டாளர்களும் நகை வாங்குவோரும் கூர்ந்து கவனிக்கும் முக்கிய நிலைக்கு வந்துள்ளது.
English Summary
Gold and silver prices falling this right time buy gold What today prices