அதிர்ச்சி! தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று உயரத்தில்...!
Gold and silver prices are high today
கடந்த 10-ந்தேதியிலிருந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.அவ்வகையில், 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.72000 யும், 13-ந்தேதி ரூ.74000 யும் கடந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 200-க்கும், ஒரு சவரன் ரூ.73600-க்கும் விற்பனை ஆனது.

இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.74000 க்கு கீழ் குறைந்து வந்துள்ளது.இந்நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,250-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.122 க்கும் கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,22,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
17-06-2025- ஒரு கிராம் ரூ.120
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
13-06-2025- ஒரு கிராம் ரூ.120
English Summary
Gold and silver prices are high today