அதிரடி திருப்பம்! மீண்டும் ரூ.15 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...! - இன்றைய அதிரடி நிலவரம் என்ன தெரியுமா...?
dramatic turn Gold price approaches 15 thousand again Do you know what dramatic situation today
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுகளுடன் நகர்ந்து வரும் நிலையில், சந்தையில் பரபரப்பு நிலவி வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையானது.

அதேவேளை, வெள்ளி விலை திடீர் உயர்வை பதிவு செய்து, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகியது.
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.14,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,960 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.இதன் மூலம், ஒரு கிராம் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.15 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
English Summary
dramatic turn Gold price approaches 15 thousand again Do you know what dramatic situation today