கார் பிரியர்களே வெறும் ரூ.10 லட்சம் கூட இல்ல: யார் வேணா வாங்கலாம்! 26 கிமீ மைலேஜ் - அட்டகாசமான லுக்கில் வெளியான நியூ மஹிந்திராபொலேரோ! - Seithipunal
Seithipunal


மஹிந்திரா நிறுவனம், தனது பிரபலமான பொலிரோ கார் மாடலின் புதிய eddition ஐ 2024-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. இது, முந்தைய பொலிரோ மாடலை மேலும் மேம்படுத்தி, புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக விற்பனை செய்யப்படுகின்றது. 

புதிய Mahindra Bolero 2024 இன் முக்கிய அம்சங்களில்:
1.5 லிட்டர் எஞ்சின் அமைப்பு: 98.56 பிஎச்பி பவரும், 260 என்எம் டார்க்கும் வழங்கப்படுகிறது. இது ஆஃப்-ரோடிங் மற்றும் நகரப் பயணங்களில் சிறந்த செயல்பாட்டை அளிக்கின்றது.

மிகச்சிறந்த மைலேஜ்: இந்த கார் லிட்டருக்கு 26 கிலோமீட்டர் வரை மைலேஜை அளிக்கும் திறன் கொண்டுள்ளது.

டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்: 7 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி, N10 (O) மாடலுக்கு மட்டும் கிடைக்கும், பயணத்தை மிகவும் ரசியமாக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்: புதிய பொலிரோவில் இரட்டை முன் ஏர்பேக்குகள், பின்புற பாக்கிங் சென்சார் மற்றும் ISOFIX சைல்டு மவுண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன, இதனை குடும்ப வாகனமாகவும் பாதுகாப்புடன் பயன்படுத்த முடிகின்றது.

விலையைப் பொருத்தவரை: புதிய மஹிந்திரா பொலிரோ ₹9.95 லட்சம் முதல் ₹13 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு மாடல்களில் கிடைக்கின்றது.

இந்த புதிய மேம்படுத்தப்பட்ட பொலிரோ, அதன் பயனுள்ள அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த செயல்பாட்டின் மூலம், மஹிந்திரா நிறுவனத்தின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் விற்பனையில் சிறப்பாக செயல்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car lovers not even Rs10 lakh Who wants to buy 26 KM MILEAGE New Mahindra Bolero Launched in Sizzling Look


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->