சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து, ரூ.1,068.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம்  1,118.50 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ரூ. 50 உயர்ந்து, ரூ.  1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 8.50 குறைந்து ரூ. 2,177.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை கடந்த மாதம்  2,186 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ரூ.8.50 குறைந்து, ரூ.  2,177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 Jun LPG Cylinder Price in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->