தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.!
30 nov petrol rate
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் 26-வது நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.101.40-க்கும், டீசல் விலை மாற்றமின்றி ரூ. 91.43-க்கும் விற்பனை ஆகிவருகிறது. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாததால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியில் உள்ளனர்.