உச்சத்தில் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
27 03 2024 today gold and silvar price
மக்களின் அன்றாட வாழ்க்கையில் தங்கம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு காரணம் பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் இருப்பர்.

அந்த வகையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 6200 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 49640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 6215 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் உயர்ந்து 49720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 80.20 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
27 03 2024 today gold and silvar price