6 மாதத்தில் 1 இலட்சம் விற்பனை – ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாதனை! ஸ்கூட்டர் விலை எவ்வளவு? - Seithipunal
Seithipunal


இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் அதிரடி சாதனை படைத்து வரும் ஏத்தர் எனர்ஜியின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், புதிய மைல் கல்லை தொட்டுள்ளது. கடந்த 2024 ஏப்ரலில் அறிமுகமான இந்த மாடல், வெறும் 6 மாதங்களில் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, மொத்தத்தில் 2 லட்சம் விற்பனையை கடந்துள்ளது என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2025 மே மாதத்தில் 1 லட்சம் விற்பனையை கடந்த ரிஸ்டா, அதன் பிறகு வெறும் ஆறு மாதங்களில் மேலும் 1 லட்சம் யூனிட்களை விற்றுள்ளது. இதனால் ஏத்தர் தற்போது விற்பனை செய்யும் மொத்த வாகனங்களில் 70%க்கும் மேற்பட்ட பங்கை ரிஸ்டா ஒரே மாடலாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஸ்டா தென் இந்தியாவில் ஆரம்ப வெற்றி பெற்ற பின், மத்திய மற்றும் வட இந்தியாவிலும் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஏத்தரின் சந்தை பங்கு FY26 முதல் காலாண்டில் 7% இருந்தது. தற்போது அது 14% ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் 8% இல் இருந்து 15% ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் 4% லிருந்து 10% ஆகவும் ரிஸ்டா பங்கு உயர்ந்துள்ளது.

ரிஸ்டா வெற்றியை மேலும் தூண்டிய முக்கிய அம்சங்கள் —

  • புதிய நிற விருப்பங்கள்

  • 3.7 kWh பேட்டரியுடன் வரும் ரிஸ்டா S

  • 123 கி.மீ.–159 கி.மீ. வரை IDC ரேஞ்ச்

  • 56 லிட்டர் ஸ்டோரேஜ்

  • ஸ்கிட் கண்ட்ரோல், ஃபால் சேப்டி போன்ற பாதுகாப்பு அம்சங்கள்

டெல்லியில் ரிஸ்டாவின் ஆன்-ரோடு விலை ₹1.22 லட்சம் முதல் ₹1.75 லட்சம் வரை உள்ளது.

ரிஸ்டா அறிமுகமாகிய பின்பு ஏத்தர் நிறுவனத்தின் ரீட்டெயில் நெட்வொர்க் வேகமாக வளர்ந்து தற்போது 524 சென்டர்களைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் மேலான ஏத்தர் ஸ்கூட்டர்கள் சாலையில் ஓடுகின்றன. இப்போது நேபாளம், இலங்கை உள்ளிட்ட சர்வதேச சந்தைகளிலும் ரிஸ்டா விற்பனை செய்யப்படுகிறது.

மொத்தத்தில், ரிஸ்டா மாடல் ஏத்தர் எனர்ஜியின் வளர்ச்சிக்கு ஒரு மாஸ் டர்னிங் பாயிண்ட் ஆக மாறி, இந்திய மின்சார வாகன சந்தையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1 lakh sales in 6 months Ather Rista electric scooter achievement How much does the scooter cost


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->