உலகிலேயே மிகப் பழமையான சிவலிங்கம் எங்கு உள்ளது தெரியுமா?! வெளிவராத தகவல்!
உலகிலேயே மிகப் பழமையான சிவலிங்கம் எங்கு உள்ளது தெரியுமா?!
சங்க காலத்தில் இருந்து சைவம் தழைத்தோங்கி இருந்தது, என்பதற்கு ஆதாரமாக உலகிலேயே மிகப் பழமையான சிவலிங்கம் உள்ள கோயில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்துார் மாவட்டத்தில் உள்ளது. இந்த சித்துார் மாவட்டத்தில், குடிமல்லம் என்ற சிறிய கிராமம் உள்ளது

இங்குள்ள சிவாலயத்தில் தான், உலகின் மிகப் பழமையான சிவலிங்கம் இருக்கிறது, என்று தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப் படுகிறது. நாம் தற்போது காணும் சிவனின் உருவம், ஆவுடையுடன் பொருந்தியதாக இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, அமைக்கப்பட்ட சிவாலயங்களில் எல்லாம், ஆவுடையுடன் சிவலிங்கம் பொருத்தப் பட்டிருக்கும்.
தாராசுரம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற பகுதிகளில், இந்த லிங்கத்தைக் காண இயலும். இந்த லிங்கம், அதன் உயரத்தில் சரிபாதி மூன்றாக வடிவத்தில் மாறி இருக்கும். உதாரணத்திற்கு, லிங்கம் 9 அடி என்றால், அடிப்பகுதியில் உள்ள 3 அடி சதுரமாக இருக்கும். இதனை பிரம்மா என்பர். இவர் தான் படைக்கும் தொழில் செய்பவர்.

நடுப்பகுதி 3 அடி உயரத்தில் எண் கோணத்தில் இருக்கும். இப்பகுதியை விஷ்ணு என்றழைக்கின்றனர். பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தையும் காக்கும் தொழில் செய்பவர் என்று பொருள்.
மேல் பகுதி 3 அடி உருளையாக இருக்கும். இதனை சிவன் என்பர். படைத்தல், காத்தல், அழத்தல் போன்ற மூன்று செயல்களையும் செய்பவர். எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். இந்த லிங்கம் ஒரே கல்லில் இருக்கும்.
ஆனால் குடிமல்லத்தில் உள்ள சிவலிங்கம், இதற்கெல்லாம் முந்தையது. 1973-ஆம் ஆண்டு, தொல்லியல் துறையினரால் இந்தக் கோயில் வளாகத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. இந்தக் குடிமல்லத்தில் ஓடும் சுவர்ணமுகி ஆற்றின் கரையோரமாக அமைந்திருக்கும், பரசுராமேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் தான், உலகின் மிகப் பழமையான சிவலிங்கம் என்பதைக் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இந்த லிங்கம் ஆவுடை இல்லாதது. எட்டடி உயரத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்டது. 2600 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் என்றும் சொல்லப் படுகிறது. இந்த ஆதி சிவலிங்கம், ஏகலிங்கம் என்று அழைக்கப் படுகிறது. இதில் இறைவன் இருப்பது, ருத்ரபாகம். இந்தக் கோயிலின் விமானத்திற்கு, கஜப் பிருஷ்டம் என்று பெயர். கஜம் என்றால் யானை. யானையின் பிருஷ்டம் என்று பொருள்
.
இந்த லிங்கத்தின் நடுவே, சிவன், வலது கையில் வில்லுடன் காட்சி தருகிறார். கீழே யட்சன் என்ற அசுரனின் தோள் மீது ஏறி நின்றிருக்கிறார். சிவனின் ஆதியான தோற்றம் இது என்று சொல்லப் படுகிறது. இந்தக் கோயிலை, இந்திய அரசு தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. திருப்பதிக்குச் செல்பவர்கள் வழியில் உள்ள இந்தக் குடிமல்லம் கோயிலை நிச்சயம் தரிசித்து விட்டு வர வேண்டும். காணக் கிடைக்காத உலகின் அரிய சிவலிங்கத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த பரசுராமேஸ்வரர் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.