அழியா எழுத்துகளை படைத்த முண்டாசு கவிஞனின் பிறந்த நாள் இன்று...!
Bharadhiyar Birth Day
ஆடுவோமே பள்ளு பாடுவோமே என சுதந்திரத்திற்கு முன்பு ஆனந்தக் கூத்தாடியது அந்த முண்டாசுக் கவிஞனின் பிறந்தநாள் இன்று.
பாரதி என்பது வெறும் பெயரல்ல உணர்வு. காலமே வாழ்ந்த ஒரு மனிதனை தமிழ்ச்சமூகம் தலைமேல் தூக்கி கொண்டாடுவதற்கு காரணமும் இருக்கத்தான் செய்கிறது. அவரின் பாடல்கள் உரைநடைகள் அனைத்தும் சமூகத்துக்கானவையாக இருந்தன. சுதந்திரப் போராட்ட காலத்தில் அனைவரும் விற்போர் செய்து கொண்டிருக்கும் பொழுது பாரதி மட்டும் சொற்போர் நடத்திக்கொண்டிருந்தார்.
1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்த சுப்ரமணி தனது கவிதிறனால் பாரதி என்ற பட்டத்தை பெற்றார். தனது 14 வயதில் செல்லமாளை மணந்த பராதி 1904ம் ஆண்டு சுதேசமித்திரனில் பணியாற்றினார். அவர் பத்திரிக்கைகளில் பணியாற்றிய நேரத்தில் அவரின் கட்டுரைகள் பிரிடிஷாருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

பேனாவில் இருந்து வந்த சொல் அம்புகள் தமிழ் மக்களின் மத்தியில் சுதந்திர தாகத்தை ஊட்டி வளர்த்தது. கவிதைகளுக்கு புது வடிவம் கொடுத்தவர் எளிமையாய் கவிதைகளை அமைத்து மக்கள் மத்தியில் சுகந்திர தாகத்தை ஊட்டியதில் முக்கிய பங்கு பாரதிக்கு உண்டு .
"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" இந்த வரிகளை கூறும் போதெல்லாம் நம்மை மீறி ஒரு உணர்வு தோன்றும் அந்த உணர்வுக்குப் பெயர் தான் பாரதி. ஆங்கில அரசின் கடும் நெருக்கடியால் புதுவைக்கு இடம் பெயர்ந்த பாரதி அங்கிருந்து பல நூல்களை படைத்தார்.
பாரதி கவிஞர் பேச்சாளர் எழுத்தாளர் பத்திரிக்கையாளர் பாரதி மானுடன். கவிதைகளால் கேள்வி வைத்தாள் அவனே அதற்கு பதிலும் கூறினார். வீரியமான கருத்துக்களை கூறலாம் இந்நாளில் அம்மகா கவிஞனை நினைவு கூர்வோம்.