இரவில் உடையில்லாமல் உறங்குவது உடலுக்கு நன்மையா?..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் ஏழை பணக்காரன் என்று அனைவருக்கும் கிடைத்த மற்றும் உலகில் உள்ள அனைத்து உயிரினத்திற்கும் கிடைத்த அற்புதமான வரம் உறக்கம். இன்றுள்ள நவீன காலகட்டத்தில் ஆண் - பெண் இருபாலரும் உறக்கத்தை துழைத்து., பணம் என்ற மூன்றெழுத்திற்கு போராடிக்கொண்டு வருகின்றனர். 

இந்த உலகில் உள்ள உயிரினங்களை போன்று மனிதரும் கட்டாயம் சரியான நேரத்தில் உறங்க வேண்டும். அவ்வாறு உறங்காமல் இருந்தால்., நமது உடல் நலமானது அதிகளவு பாதிக்கும். நாம் சரியாக தூங்கவில்லை என்றால் ஹார்மோன்களின் வளர்சிதை மாற்றம்., மன அழுத்தம் மற்றும் உடற்பருமன் போன்ற பிரச்சனையால் அதிகளவு அவதியுற நேரிடும். 

இந்த பிரச்சனைகளை அதிகளவு சரிசெய்ய நல்ல உறக்கத்தை தினமும் மேற்கொண்டாலே போதுமானது. பெரும்பாலானவரர்கள் தூங்கும் சமயத்தில் காற்றோட்டம் அளிக்கும் வகையில் உள்ள உடைகளை அணிந்தே உறங்குவதற்கு விரும்புவார்கள். இது அவர்களின் எண்ணத்தை பொறுத்து மாறுபடும் சூழலில்., சிலருக்கு உடலில் துணியில்லாமல் படுத்து உறங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். 

இது சிலருக்கு மட்டும் தோன்றும் எண்ணமாக இருந்தாலும்., உடலில் துணியில்லாமல் உறங்கினால் அதிகளவு நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகளின் கூற்றுகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில்., இரவில் உடையில்லாமல் உறங்கினால் உடலின் வெப்பமானது குறையும். நம்மிடையே இருக்கும் அதிகளவிலான மன அழுத்தம் உடலின் ஆரோக்கியத்தையும் குறைத்துவிடும். 

மன அழுத்த பிரச்சனையை தடுப்பதற்கு., விலையில்லா மருந்தான உறக்கம் சிறந்த மருந்தாகும். இரவில் உடையின்றி உறங்குவதன் மூலமாக உடலின் வெப்பம் குறைந்து., உடலின் இரத்த ஓட்டம் சீராகிறது. நமது உடலும் குளிர்ச்சியடைந்து தூக்கமின்மையால் ஏற்பட்ட உடற்பருமன் குறைகிறது. நமது நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sleeping without dress at night benefit the body


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->