மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல் - 9 சீனர்கள் பலி - Seithipunal
Seithipunal


மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள தங்க சுரங்கத்தில் ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தலைநகர் பாங்குய்யின் பம்பாரி நகரத்திலிருந்து சுமார் 15 மைல் (25 கிமீ) தொலைவில் உள்ள சீன நிறுவனத்தால் நடத்தப்படும் தங்க சுரங்கத்தில் வழக்கமாக நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சுரங்கத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், சுரங்கத்தில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் ஒன்பது பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து, சீன அதிபர் ஜி ஜின்பிங், குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், சீன குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனத் தூதரகம், பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சீன நிறுவனங்களையும், குடிமக்களையும் பாங்குய்க்கு வெளியே பயணிக்க வேண்டாம் என்றும், அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தை அணுகி தூதரகப் பாதுகாப்பைப் பெறுமாறு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nine Chinese killed in attack on Central African Republic


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->