" Ai "மூலம் போலி வீடியோக்கள் வெளியிட்டு எதிர்க்கட்சிகள் சதி - பிரதமர் மோடி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ,மகாராஷ்டிரா மாநிலம் காரட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசுகையில், பாஜகவை எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் போலி வீடியோகளை தயாரித்து வெளியிட்டு கொண்டுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் போலி வீடியோகளை தயாரித்து வெளியீடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அமித்ஷா, ஜே.பி நட்டா மற்றும் எனது வீடியோக்களை ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் போலியாக தயாரித்து உள்ளனர். அடுத்த ஒரு மாதத்தில் மிகப்பெரிய சம்பவத்தை உருவாக்கு எதிர் கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் கனவு ஒரு நாளும் நனவாகாது என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ai software fake videos by Modi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->