மறைந்த பா.ஜ.க. எம்.பி.: காங்கிரஸ் அரசு அதிரடி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal



கர்நாடகா, சாம்ராஜ் நகர் தொகுதியின் எம்.பி ஆக இருந்த வி. ஸ்ரீனிவாஸ் பிரசாத் (வயது 77) வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். பா.ஜ.கவைச் சேர்ந்த மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான பிரசாத்தின் மறைவை அடுத்து கர்நாடக அரசு, மைசூர் மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து கர்நாடகா முதல்வர் சீதாராமையா தெரிவித்திருப்பதாவது, எம்.பி பிரசாத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. 

அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி சடங்கு நடைபெறும். மறைந்த எம்.பி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவருடைய குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp MP died Karnataka government declared holiday


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->