ஒரே நாளில் "152 ஜாமீன் + 211 முன் ஜாமீன்" வழக்குகள்.. Red Zoneல் தமிழகம்.. பரபரப்பை கிளப்பிய முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கஞ்சா போதையில் அரங்கேறும் குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் திருவள்ளூரில் 4, கிருஷ்ணகிரியில் 3, சென்னை ஆர்.கே நகரில் 1, தஞ்சாவூரில் 1, விருதுநகரில் 1 என்ற எண்ணிகையில் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதில் பெரும்பாலான குற்ற செயல்கள் கஞ்சாவின் காரணமாகவும் போதை வஸ்துக்களின் காரணமாக நிகழ்ந்துள்ளதாகவும், பல குற்ற செயல்கள் இன்னும் வெளிவராமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் "மூத்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தபோது இன்று ஒரே நாளில் 152 ஜாமீன் + 211 முன்ஜாமின் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்க பட்டியலிட்டதை காட்டி குற்ற எண்ணிக்கை அதிகரித்து தமிழகம் red zoneல் இருப்பதாக கூறிவிட்டு நான் சொல்றது கேட்குதா என்றார்! கொடைக்கானலுக்கு கேட்கணுமே என்றேன் நான்! " என பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK advocate inbadurai tweet tamilnadu in crime red zone


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->