#Breaking: பல்டி அடிக்கும் சீனா... இராணுவ தலைமையுடன் ஆலோசனையை துவங்கும் இந்தியா..!! - Seithipunal
Seithipunal


லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்ப பெறப்படும் செயல்முறையின் போது இந்திய - சீன இராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த மோதலின் போது இருபடைக்குள்ளும் சண்டை வலுத்த நிலையில், இந்திய இராணுவ  அதிகாரி ஒருவர் மற்றும் 2 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன இராணுவம் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. மேலும், நேற்று இரவே சீன இராணுவம் அத்துமீறியதாக தெரியவருகிறது. இதனால் இந்திய - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பதற்றத்தை தணிக்க இந்திய - சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தியா தன்னிசையாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய இராணுவத்தினர் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ள நிலையில், பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இந்தியா ஏதும் முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சீன அரசின் வெளியுறவுத்துறை சார்பாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும், இந்திய இராணுவம் எல்லை மீறி வந்து சீனாவின் மீது தாக்குதல் நடத்தியது என்றும் சீனா குற்றசாட்டை முன் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், எல்லையில் பதற்றம் அதிகரிப்பதன் காரணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய - சீன எல்லையில் பதற்றம்.. இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்.!! 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India China border problem India high officials discuss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->