கொடநாடு வழக்கில்.. மீண்டும் 9 பேர் எஸ்கேப்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடநாடு எஸ்டேட் பங்களாவில் அரங்கேற்றப்பட்ட கொலை கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தன் ஜாய் சதீசன் உள்ளிட்ட 10 பேரில் ஒருவர் கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

ஆனால் அரசு தரப்பில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் மட்டுமே ஆஜராகினர். இதனை அடுத்து வழக்கின் விசாரணையை இன்று ஒத்தி வைத்திருந்தனர். அதன்படி இன்று கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் தவிர மற்ற 9 பேரும் ஆஜராகவில்லை. 

சிபிசிஐடி தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரம் அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகினர். கடந்த முறை 10 பேரும் ஆஜராகாத நிலையில் இன்று 9 பேர் ஆஜராகாததால் உதகை நீதிமன்றத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆஜராகாத ஒன்பது பேருக்கும் மீண்டும் சமன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 accused not appeared in kodanadu case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->