ஆளுநரை வீதியில் புரட்டி எடுத்த பொதுமக்கள்..!!  - Seithipunal
Seithipunal


கிரீஸின் நாட்டின் 2 வது மிக பெரிய நகரமான தசலோனிகி நகரத்தின் ஆளுநர் 'யானில் போட்டரிஸ்'[73] அந்நகர பொதுமக்கள்  சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தசலோனிகி நகரத்தின் பொதுமக்கள் அவர் மீது தாக்குதல் நடத்த முக்கிய காரணம் தேசியவாத எதிர்ப்பு கருத்து உள்ளவர் என்பது தான், கடந்த சில நாட்களுக்கு முன் முதல் உலகப்போரில் துருக்கி நாட்டவர்களால் கொல்லப்பட்ட கிரேக்க நாட்டு மக்களுக்கு  நினைவு செலுத்தும் விழாவிற்கு 'யானில் போட்டரிஸ்' கலந்துகொள்ள வந்திருந்தார்.

இவர் அங்கு வந்ததை பொதுமக்கள், கூட்டமாக ஆளுநர் யானில் போட்டரிஸை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின் போலீசாரால் மீட்கப்பட்ட ஆளுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த ஆளுநர், ''இது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு நிகழுவு. பொதுமக்கள் தாக்கியதில் நான் நிலை குலைந்து போனேன், என் உடல் முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது''. என தெரிவித்திருந்தார்.

மேலும் ஆளுநர் மீதான இந்த தாக்குதலுக்கு, கிரேக்க பிரதமர் அலெக்சிஸ், ''ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தீவிர வலதுசாரிகள். இந்த தாக்குதலுக்கான விளைவுகள் கடுமையானதாக இருக்கும்''. எனவும் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor attacked public people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->