போராடி பெற்ற காவேரி நீர்.! நம்பவைத்து பழிவாங்கிய தமிழகஅரசு.!! அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 10 நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மேலும், கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பி, முழுக் கொள்ளளவை எட்டியது. 

இதனால், அங்கு வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்க, அங்குள்ள அணைகளிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் முதல் 1.20 லட்சம் கன அடி நீர் வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளைக்குள் 100 அடியை தொடும் என தேர்ப்பார்க்கப்பட்டது.

நேற்று மேட்டருள் அணை 90 அடியை எட்டிய உடன், காவேரி டெல்டா விவசாயிகளின் பாசனத்துக்கு, நாளை (ஜூலை 19) மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதே போல் இன்னும் ஒரு வாரத்தில் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிளை ஆறுகள், பிரதான வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாகத் தூர் வாரும் பணிகள் மேற்கொண்டும் பணிகள் முடியவில்லை. 

இந்த விடயம் குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், ''இந்த கிளை ஆறுகள், வாய்க்கால்கள் கண்மாய்கள், தூர் வாராமல் தண்ணீர் வந்து பயனில்லை, இந்த தண்ணீருக்காக தமிழகம் முழுவது அவ்வளவு போராட்டங்கள் நடந்தேறியியுள்ளது. இயற்கையை அன்னையின் கருணையால் கிடைக்க பெற்ற இந்த நீரை விவசாயிகள் நாங்கள் பயன்படுத்தமுடியாமல் போய்விடுமோ என்ற நிலையில் உள்ளோம்.

எனவே இன்னும் ஒரு வார காலத்துக்குள், முழுமையாக தூர்வாரும் பணிகள் முடிக்க வேண்டும்'' என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். மேலும், இன்னும் ஒரு வாரத்துக்குள் போர்க்கால அடிப்படையில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றால்தான் இந்த ஆண்டு நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என கவலையோடு தெரிவிக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN FORMER PROBLEM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->