அரசாங்கத்தின் அலட்சிய போக்கினால் இரு சிறுமிகளின் கொடுமையான மரணம்!. கோவத்தில் போராட்டத்தில் குதித்த மக்கள்!. - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி இவர் வழக்கறிஞராக உள்ளார். விடுமுறை என்பதால் இவர் வீட்டிற்கு உறவினர்களின் மகள்கள் இருவர் வருகை தந்துள்ளனர்.

கும்பகோணத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளான சியாமளா மற்றும் வர்ஷினி ஆகிய இரு சிறுமிகளான இவர்கள் விளையாடுவதற்காக வெளியே சென்றிருக்கின்றனர். அங்கு உள்ள குழந்தைகள் விளையாட்டு என்றாலே மண்ணின் மீது ஏறி விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் அருகே உள்ள கொம்புக்காரன் குட்டையில் இவர்கள் விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மண் சரிய ஆரம்பித்திருக்கிறது.

குழந்தைகள் இருவரும் அலறிய சத்தம் போட்டதால் ஓடி வந்த ஊர்க்காரர்கள் சிறுமிகளை மீட்டனர். ஆம்புலன்சிற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அம்புலன்ஸ் வராத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை தூக்கி கொண்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். அங்கும் மருத்துவர் இல்லை. மீண்டும் அங்கிருந்து மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலேயே அந்த இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

10 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட மண்ணை நீக்காமல் வைத்திருந்தாலும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வராமல் இருந்ததாலும் மருத்துவர் இல்லாமல் போனதாலும் இரண்டு பிஞ்சு உயிர்கள் அநியாயமாக பலியாகி இருப்பதால் அந்த ஊர் மக்கள் ஆத்திரமடைந்து போராட்டம் நடத்தினர்.

குத்தாலம் போன்ற பல ஊர்களில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலைப்பாடு இருந்துவருகிறது. அலட்சிய போக்கினால் இரு பிஞ்சு உயிர்களின் உயிர் பிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்துக்குள்ளாக்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The brutal death of the two girls by negligence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->