தஞ்சை | தவறு செய்த டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம்! பார் உரிமையாளர், ஊழியர் கைது! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசின் உரிமம் பெற்ற டாஸ்மாக் பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் குடித்த மதுவில் சயனைடு நஞ்சு கலந்திருந்தது தான் உயிரிழப்புக்குக்  காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேற்று பேட்டியளித்திருந்தார். 

இது ஒருபக்கம் இருந்தாலும், உயிரிழந்த இருவரும் காலை 11.00 மணிக்கு டாஸ்மாக் பாரில் சென்று மது அருந்தியுள்ளனர். 

சர்ச்சைக்குரிய அந்த டாஸ்மாக் பார் அதிகாலையிலேயே திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டியவர்கள் என்னதான் செய்கிறார்கள்? ஆளும் கட்சியின் ஆதரவோடு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறதா? என்ற கேள்வியை அரசியல் கட்சியினர் எழுப்பி வருகின்றனர். 

இதற்கிடையே, மது அருந்தி 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட டாஸ்மார்க் கடையின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட நான்கு பேரை பணியிட நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் முருகன் மற்றும் அந்த கடையின் விற்பனையாளர்கள் மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjai TASMAC bar death case tn police action


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->