தஞ்சை | மணல் லாரியால் அரங்கேறிய விபத்து! இஸ்லாமிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


தஞ்சை அருகே மணல் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் பலியான நிலையில், படுகாயங்களுடன் இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த அப்துல் காதர் மனைவி ஜெரினா பேகம்.இவரது மகள் சமீகா (14), மகன் முகமது  சைஃப் (4) ரெட்டிபாளையம் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கம் போல இன்று காலை பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் ஜெரினா பேகம் அழைத்துச் சென்று உள்ளார்.

பள்ளி அருகே வாகனம் சென்று கொண்டிருந்த போது, மணல் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஜெரினா பேகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயம் அடைந்த அவரின் குழந்தைகள் இருவரையும் மீட்ட பொதுமக்கள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து நடந்த பகுதியில் இதேபோல் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அரசின் அலட்சியத்தால் தற்போது ஒரு உயிர் பலியாகி உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இந்த சாலையில் இது நாள் வரை ஏன் வேகத்தடைகள் அமைக்கவில்லை என்றும், பொதுமக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjai Scooty Accident


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->