KOVAI செயின் பறிப்பு ஏட்டய்யா! சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை : அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரியை, பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்

கடந்த 27ம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சபரிகிரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில்எ  அடைத்தனர்.

இந்த நிலையில், சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Pollachi Chain Snatching case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->