முதல் மந்திரி சித்தராமையா திடீர் தர்ணா போராட்டம்! கர்நாடகாவில் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள 236  தாலுகாக்களிலும் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடகா அரசு அறிவித்தது. 

மேலும் வறட்சியால் பயிர்கள் செய்தமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு ரூ. 18,171 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. 

இதற்கிடையில் வறட்சி நிவாரண பணிக்காக கர்நாடகாவுக்கு மத்திய அரசு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடகா அரசு விடுத்த கோரிக்கை விட மிகவும் குறைவானது. 

இந்நிலையில் வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே. சிவகுமார் மற்றும் மந்திரிகள் என பலரும் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடக சட்டசபை வளாகத்திற்கு வெளியே திரண்ட அனைவரும் கையில் சொம்பு ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Siddaramaiah dharna protest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->