வெயிலுக்கு இதமான 'தேங்காய் பால் குச்சி ஐஸ்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


சுவையான வெயிலுக்கு இதமான தேங்காய் பால் குச்சி ஐஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
தேங்காய் 
பால் 
சர்க்கரை 
பால் பவுடர் 

செய்முறை: 
முதலில் தேங்காய் சில்லிகளில் மேல் உள்ள கருப்பு நிற தோலை நீக்கி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், சர்க்கரை சேர்த்து அதில் பாலை ஊற்றி நன்றாக கலந்து விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். 

பிறகு ஐஸ் மோல்டுகளில் கலந்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஊற்றி 7 முதல் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் குச்சி ஐஸ் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coconut Milk Kuchi Ice Recipe In Tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->