நெல்லையில் பலியான உயிர்கள்! அதிர்ச்சி பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்! - Seithipunal
Seithipunal


தொடர் அதிக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்றுவரை மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 16 பேர் இந்த கனமழை, வெள்ளம் காரணமாக உயிரிழந்து உள்ளனர் என்று, மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், 1024 பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், 67 மாடுகள், 54 ஆடுகள், 135 கன்று குட்டிகள் உயிரிழந்து உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த கனமழை வெள்ளம் காரணமாக 28,392 கோழிகள் உயிரிழந்து உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். 

முதற்கட்டமாக 58 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Heavy Rain And Flood Death info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->