போட்டுக் கொடுத்த பாஜக.. சுற்றி வளைத்த பறக்கும் படை.. திமுகவுக்கு புதிய சிக்கல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நாளை மறுநாள் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதே வேளையில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் அரசு அதிகாரிகளும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாத சோதனை ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு பண பட்டவாடா செய்யப்படுவதாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் திமுக ஒன்றிய செயலாளர் கண்ணினின் காரை இறுக்கி சோதனை செய்தனர். 

அப்போது அவர் வாகனத்தில் இரந்து ரூபாய் 8 லட்சத்தி 59 ஆயிரத்தை பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். அதற்குரிய ஆவணங்களை திமுக ஒன்றிய செயலாளர் இடம் கேட்டபோது வழங்காததால் கைப்பற்றப்பட்ட அனைத்து பணத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

நீலகிரி தொகுதியில் திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா போட்டியிடும் சூழலில் திமுக ஒன்றிய செயலாளர் இடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flying squad seized Rs8lakh 59 thousand seized from DMK union secretary car


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->