தேர்தலை முன்னிட்டு 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆர். மோகன் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

 நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 10,000 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 தேதிகளில் தினசரி இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் சேர்த்து 2 ஆயிரத்து 970 சிறப்பு பேருந்துகள் இரண்டு நாட்களுக்கு இயக்கபடும். சென்னை அல்லாத பிற நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல 3 ஆயிரத்து 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 10 ஆயிரத்து 214 பேருந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் கூட்ட நேரிசை தவிரக்க பயணிகள் முன்பதிவு செய்து பேருந்துகளில் பயணிக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election define special bus runing


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->