சமூகநீதி என்றால் அது பாமக, மருத்துவர் அய்யா தான்! மொத்தம் 6 இடஒதுக்கீடு - அன்புமணி இராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


சேலம் : வாழப்பாடி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தபின், நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது, "பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பல சாதனைகள் செய்து வருகிறது.

ஆட்சியில் அதிமுக இருந்தாலும், திமுக இருந்தாலும் பாமகவினுடைய திட்டங்களை தான் ஒன்று ஒன்றாக செயல்படுத்தி வருகின்றன. செயல்படுத்தி உள்ளன. செயல்படுத்த வைத்து உள்ளோம். 

உதாரணத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் 16 ஆண்டு கோரிக்கையான வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை கடந்த ஆண்டு திமுக அரசு தாக்கல் செய்தது. நுழைத்தேர்வு வேண்டாம் என்று முதலில் குரல் கொடுத்தது பாமக. அதற்காக உரிய அழுத்தம் கொடுத்து பின், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நுழைத்தேர்வை ரத்து செய்தார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தான். கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே இந்த சட்டத்தை இயற்ற வைத்தோம். சட்டம் அமலில் இருந்த பத்து மாதங்களில் எந்த ஒரு தற்கொலையும் தமிழகத்தில் நிகழவில்லை.

பின்னர் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசிடமும் அழுத்தம் கொடுத்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். அதற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

சமூக நீதி என்றாலே அதற்கு மறு பெயர் பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் அய்யா அவர்கள் தான். ஆளுங்கட்சி திமுக சமூகநீதி, சமூகநீதி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சமூக நீதிக்கு இந்தியாவில் ஒரு தலைவர் என்றால் அது மருத்துவர் அய்யா அவர்கள் தான்.

தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி மொத்தம் ஆறு இட ஒதுக்கீட்டிற்கு காரணமானவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். இப்படி எந்த ஒரு தலைவரும் இந்தியாவில் கிடையாது.


 
காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று முதன் முதலில் கூறியது பாட்டாளி மக்கள் கட்சி தான். இந்த அன்புமணி தான் முதலில் கூறினான். அதற்காக பிரச்சாரம், போராட்டம் நடத்தி, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உரிய அழுத்தம் கொடுத்து, கொடுத்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வைத்தோம். 

சேலம், மேட்டூர் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று 35 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவதாக கலைஞர், ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம் உறுதி அளித்தனர். ஆனால் செய்யவில்லை.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் பலமுறை அழுத்தம் கொடுத்த பிறகு தான், அவரும் இந்த திட்டத்தில் முதல் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் அது போதுமானது கிடையாது." என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Social Justice April 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->