''கோட்'' திரைப்படத்தின் 2 வது பாடல் குறித்த அப்டேட்! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''கோட் ''. இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

''கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்'' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இதற்கிடையே கோட் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் வெங்கட் பிரபு சினிமாவின் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக கேள்வி பதில் பகுதியில் ரசிகர் ஒருவர், ''கோட்'' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் எப்பொழுது என கேட்டுள்ளார். 

அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, ஜூன் என பதிலளித்துள்ளார். இதனால் கோட் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOAT movie 2nd song update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->