விஜய் பிறந்த நாளில் தமிழக வெற்றி கழகம் மாநாடு!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.  தி கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

 இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளும் விஜய்யின் செயல்பாடுகளும் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அக்கட்சியின் மாநாட்டின் மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த எந்த அறிக்கையும் விஜய் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Vetri Kazhagam conference on Vijay birthday


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->