தமிழக அரசே.! டாஸ்மாக்கை மூட முடியுமா.? முடியாதா.? அதிரடியாக களமிறங்கிய பாதுகாப்பு படை, போலீஸ்.!!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளால் நாளுக்கு நாள் அதிக குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது, இதை முக்கியமாக இந்த தமிழக அரசி மதுக்கடையில் போதை ஏற்றும் ''தமிழ் குடிமகன்கள்'' ஒன்று தற்கொலை செய்து கொள்கின்றனர். இல்லை போதை தலைக்கேறி தன் கூட இருக்கு யாரையாவது கொலை செய்து விடுகின்றனர்.

நேற்று முன் தினம் கூட தஞ்சை அருகே உள்ள வலங்கைமான் எனும் பகுதியில் திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் குடிபோதையில், 'கணவன் மனைவி இரண்டு மகன்களையும் மண் வெற்றியால் அடித்தே கொன்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதிமக்கள் மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதே போல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வருவதாக தெரியவில்லை, அதே சமயத்தில் பாமக கட்சியினர் சட்ட போராட்டம் மூலம் நெடுஞ்சாலைகளில் இருந்த அரசு மதுக்கடைகளை மூடினார். இந்த மூடிய அரசு மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை கண்டு தமிழக மக்கள் அதிர்ந்து போயினர். 

இந்நிலையில், இரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ள தமிழிக அரசு மதுக்கடைகளால் (டாஸ்மாக்) உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை உடனே மூடுமாறு தமிழக அரசை வலியுறுத்தி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) கடிதம் எழுதியுள்ளது.

இது சம்மந்தமாக சென்னை கோட்ட இரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎப்) மூத்த ஆணையர் 'லூயிஸ் அமுதன்' அந்த கடிதத்தில், தமிழக அரசுக்கு தெரிவித்திருப்பதாவது, ''இரயில்வே காவல்துறையும், இரயில்வே பாதுகாப்புப் படையும் இணைந்து இரயில்பாதைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதவிர, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். 

பள்ளி, கல்லூரி மாணவர் கள் விதிமுறைகளை மீறி செயல் படும்போது வீடியோ பதிவு செய்து சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்புவதுடன், அந்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இரயில்பாதையில் ஏற்படும் இறப்புகளுக்கு செல்போன் பேசிக்கொண்டே இரயில் பாதையை கடத்தல், தண்டவாளம் அருகே அமர்ந்து மது குடித்து மயங்கி விழுதல் உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கின்றன. 

சென்னை இரயில் கோட்டத்தில் மட்டும் 14 இரயில் நிலையங்களுக்கு அருகில் டாஸ்மாக் (தமிழக அரசு மதுபான கடைகள்) கடைகள் இருக்கின்றன. எனவே, இந்த கடைகளை மூட வேண்டுமென தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CLOSE THE TASMAK IN RAILWAY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->