சென்னை: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து மர்மக்கும்பல் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்.

சென்னை: தாம்பரத்தை அடுத்த நயம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மூங்கிலான் (56). இவர் காஞ்சீபுரம் மாவட்ட அதிமுகவில் முக்கிய பிரமுகராக உள்ளார். மேலும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறர்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் மூங்கிலான் வீட்டில் இருந்து மஞ்சு வாஞ்சேரி எனும் இடத்தில சாலையோரம் உள்ள கடையில் டீ குடிக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின் டீ குடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்ற மூங்கிலானை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வழி மறித்தது. இத்தனை சற்றும் எதிர் பார்க்காத மூங்கிலானை, கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். பின் அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பித்து ஓடியது.

வெட்டுபட்ட  மூங்கிலான் வலி தங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார், இதனை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மூங்கிலான் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். 

தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். மேலும், கொலைக்கு ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமா? இல்லை வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk VIP murder in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->