தொடர்ந்து உயிர்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி.! ரூ.16 லட்சம் பணத்தை இழந்தவர்.. மெரினா கடலில் குதித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் பணத்தை இழந்தவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (45). இவரது மனைவி ராதா. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்ற சுரேஷ் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, வீட்டில் இருந்து சுரேஷின் செல்போனை ஆய்வு செய்தபோது கடிதம் ஒன்று எழுதி, படம் பிடித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அந்த கடிதத்தில், ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் பணத்தை இழந்து விட்டேன். நான் வாழ தகுதியற்றவன் என்பதால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று எழுதி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராதா உடனடியாக இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், சுரேஷ் கடந்த மூன்று ஆண்டுகளாக ரொம்ப விளையாடி ரூபாய் 16 லட்சம் பணத்தை இழந்தது தெரிய வந்தது.

மேலும் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியும் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். இதனால் சுரேஷுக்கு கடன் தொல்லையும் இருந்து வந்ததால் மனவேதனையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனது தெரியவந்தது. இந்நிலையில் காணாமல் போன சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுரேஷ் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் மெரினா கடற்கரையில் ஒதுங்கிய சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person who lost 16 lakhs in online rummy committed suicide by jumping into the sea in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->