ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய அணி விளையாடும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய அணி  ஆஸ்திரேலியா சென்று தீவிர வலைப்பயிற்சி மற்றும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Indian team matches telecast in Inox multiplex theatre


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->